உங்களிடம் பணம் அதிகரிக்க சில ஆன்மிக வழிகள்!

0
4044

சிலர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களிடம் பணம் சேர்வதே கிடையாது, நாம் நேர்மையாக கடினமாக தானே உழைக்கிறோம் ஆனால் ஏன் நம்மிடம் பணம் சேர்வதே இல்லை என்ற கேள்வி பலர் மனதில் எப்பொழுதும் இருக்கும். அவர்கள் பின் கூறிய வழிகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டு பணப்புழக்கம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம்.

எப்பொழுதும் யாரிடமும் பணம் கொடுக்கும் போது இடது கையால் கொடுக்கக் கூடாது, எப்பொழுதும் வலது கையையே உபயோகப்படுத்த வேண்டும்.

எப்பொழுதும் உங்கள் மணி பர்ஸ்சையோ, கல்லா பெட்டியையோ, பணப் பெட்டியையோ காலியாக வைக்கக்கூடாது, ஒரு குறைந்தபட்ச தொகையையாவது அதில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் பணம் பணத்தை ஈர்க்கும் என்பது விதி.

எப்பொழுதும் ஒரு பொருளை வாங்க பணத்தை கொடுக்கும்போது இந்த பணத்தை எனக்கு அளித்த இறைவனுக்கு நன்றி, என் தேவையை நிறைவேற்றுவதற்காக செல்லும் இந்த பணம் வேறு ஏதேனும் வழியில் என்னிடமே வந்து சேரவேண்டும் என்று வேண்டி கொடுப்பதை பழக்கமாக வைத்து வாருங்கள். நிச்சயம் உங்கள் பணப்புழக்கம் அதிகரிப்பதை கண்கூடாக உணர்வீர்கள்.

சுத்தமான இடத்திலேயே லட்சுமி தேவி வாசம் புரிவாள், எனவே வீடு அலுவலகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் பணம் வைக்க பயன்படுத்தும் பெட்டி, பர்ஸ் முதலியவற்றை எப்பொழுது சுத்தமாக வைத்திருங்கள்.

எப்பொழுதும் வரவு செலவு கணக்குகளை எழுதி வைக்க வேண்டும், ஏனெனில் கணக்கில்லாமல் வரும் பணம் கணக்கில்லாமலே சென்றுவிடும் என்பது முன்னோர் வாக்கு.

வங்கியில் பணம் செலுத்தும் பொழுதும், பண பட்டியில் பணத்தை வைக்கும்போதும் ஸ்ரீ மகாலட்சுமியை மனதார வணங்குவது பணவரவை அதிகரிக்கும்.

கடை மாற்றும் அலுவலகத்தில் கீழே அளித்துள்ள மந்திரத்தை ஜெபித்தபடியே தினம் ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காண்பிக்க வேண்டும். இது லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும்.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா”

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:30 முதல் 7:00 மணிக்குள் ஒரு செம்பில் கொஞ்சம் தண்ணீர் வைத்து சிறிது மஞ்சள் பொடி போட்டு மேற்கு நோக்கி அமர்ந்து கீழ்காணும் மந்திரத்தை ஜெபித்து அந்த நீரை கல்லா,பணப்பெட்டி,கடை அல்லது அலுவலக முகப்பு ஆகியவற்றில் தெளித்து வந்தால் பண வரவு அதிகரிக்கும்.

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் லக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச மம மந்திரே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here