கல்லூரிவிழாவுக்குப் போன ஜூலிக்கு ஏற்பட்ட அவமானம்.. அசிங்கப்பட்டு வெளியேறிய வீடியோ

0
704

பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்று தன் பெயரை வெகுவாக டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி. துவக்கத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சியாக பார்க்கப்பட்ட ஜூலி, பிக்பாஸில் அள்ளிவிட்ட பொய்களால் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவர் ஒரு சில திரைப்படங்களிலும் துண்டு, துக்கடா ரோல்களில் தலைகாட்டினார். அண்மையில் இவர் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு பேசப் போனார். அப்போது அவரை பேசவே விடாமல் ஸ்டூடண்ட்ஸ் ஓ வென கத்திக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா வாழ்க…ஓவியா வாழ்க என கத்தத் துவங்கினர். இதனா ஒருகட்டத்துக்கு மேல் பேசவே முடியாமல் அழுதுகொண்டே வெளியேறினார் ஜூலி…

கல்லூரி விழாவில் அவர் பேசிய இரண்டே நிமிடத்தில் அவர் கூறியதாவது, ‘’உண்மையான பிரண்ட்ஷிப்பை வைச்சுக்கங்க. உண்மையான பிரண்ட்ஸிப் எதுன்னு கத்துக்கங்க.

(ஓவியா வாழ்கன்னு கத்துகிறதுகூட்டம்…)கூட்டமா கத்துறது பெரிய விசயம் இல்லை. ஒரு ஆளா இங்க நின்னு எல்லாரையும் சமாளிக்கதுதான் விசயம்.நீங்க உழைச்சாத்தான் உனக்கு சோறு. நான் உழைச்சாத்தான் எனக்கு சோறு. யாரும் சோறு போடது கிடையாது. அதனால யாரு என்ன சொன்னாலும் தட்டிவிட்டு போயிட்டே இரு.

வாழ்க்கையில் நான் கத்துகிட்ட ஒரேபாடம் என்ன தெரியுமா? விழுகலாம். ஆனால் விழுந்து கடக்க கூடாது. எழுந்து நிக்கணும். ”என சொல்லிக்கொண்டிருப்பவரால் மேற்கொண்டு பேச முடியாமல் விலகிச் செல்கிறார்.

வீடியோ இணைப்பு இதோ….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here