பிகில் படத்தின் டிரெய்லரை பார்த்த தல அஜித் என்ன சொன்னார் தெரியுமா? தல னா கெத்து

0
1184

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் தனது 63-வது படமாகிய பிகில் திரைபடத்தில் நடித்துள்ளார்.இது விஜய்- அட்லீ கூட்டணியின் மூன்றாவது படமாகும். இதற்கு முன் மெர்சல், தெறி ஆகிய திரைப்படங்களை அட்லீ இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் கதிர், யோகி பாபு,விவேக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு ரகுமான இசையமைக்கிறார்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தளபதி நடிக்கும் பிகில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. எனவே, இந்தப் படத்திற்காக அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த தல அஜித்,” படம் நன்றாக அமைய வாழ்த்துக்கள்”, என்று விஜய்யிடம் வாழ்த்துக்கள் தெரிவித்ததாக செய்திகள் பரவியிருந்தன.

இந்நிலையில், இன்று இயக்குனர் சிவா மற்றும் இசையமைப்பாளர் இமானுடன் செய்தியாளர்களை சந்தித்த தல அஜித்,”விஜயின் பிகில் கண்டிப்பாக மாபெரும் வெற்றியைப் பெறும்.இப்படம் பல சாதனைகளை செய்ய எனது வாழ்த்துக்கள். மேலும், இப்படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here