அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுதலும்…அதன் பலன்களும்…

0
496

அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அவர்கள் அம்மனுக்கு உகந்ததான எலுமிச்சை பழம் மாலைகள் அணிவித்து வழிபடுகிறார்கள். பலர் பட்டு சேலைகளை நேர்த்திக் கடனாக செலுத்துகிறார்கள். கோவிலுக்கு வரும் பெண்கள் நெய் விளக்கு தீபமும் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு செல்கிறார்கள்.

எண்ணிக்கை வடிவில் நெய்தீபம் ஏற்றினால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:
5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம்.
9 நெய் விளக்கு ஏற்றினால் நவகி ரக தோஷம் நீங்கும்.
12 நெய் விளக்கு ஏற்றினால் வேலை யில் தடை நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.
27 நெய் விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.
48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்ஷம் பெறலாம்.

நெய் விளக்கு ஏற்றிய பின்னர் பக்தர்கள் அம்மனை வணங்க வேண்டும். அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் அவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here