ஸ்லோ பாய்சனாக மாறும் உணவு – இனி உஷாராக இருப்பீர்களா?

0
666

பிளாஸ்டிக் பொருட்கள் வன விலங்குகளுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தினையே ஏற்படுத்துகின்றது என்பதை தெரிந்தும் அதனை இன்னும் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றோம்.

தண்ணீர் குடிப்பதற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல், குளிர்பான போத்தல், காய்கறிகள் பேக்கிங் செய்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் என அனைத்துமே மனிதர்களைக் கொலை செய்யும் ஸ்லோ பாய்சன் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம்.

இதனை தயவு செய்து ஒதுக்கிவிட்டு, உணவு, தண்ணீர் கொண்டு செல்வதற்கு செம்பு போத்தல், ஸ்டீல் போத்தலைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கவும். பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தாலும் இன்னும் நம்மில் சில மக்கள் தங்களது தற்போதைய சுயநலத்தினையே பார்த்து

இவ்வாறு நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் BPA என்ற நச்சு மனிதர்களின் உடலில் அதிகளவு கலந்திருப்பதாக தற்போதைய ஆய்வு ஒன்றில் வெளிவந்துளள்து. இந்த BPA என்ற நச்சுப் பொருட்கள் உடலில் கலப்பதால் பல உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தையின்மை, கேன்சர் போன்ற கொடி நோய்க்கு மனிதர்களைக் கொண்டு சென்று விடுகின்றது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

சிலர் தான் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் BPA – Free என்று போடப்பட்டுள்ளதால் அது பாதுகாப்பானது என்று நினைத்துக்கொண்டிருப்பது முற்றிலும் தவறாகும். குறித்த பிளாஸ்டிக் பொருட்களில் BPA நச்சுப்பொருட்களின் அளவினைத் துல்லியமாக கணக்கிட முடியாத போதில் அதன் பாதிப்பு மட்டும் கடுமையாக இருக்குமாம்.

குறித்த ஆய்வில் கர்ப்பிணி பெண்கள் 29 பேரின் சிறுநீரை சோதனை செய்ததில் அதில் அதிக அளவு BPA நச்சு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இவை முந்தைய ஆய்வினை விட 44% அதிகமாக இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ரசாயன பொருட்கள் மனிதர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை தயாரிப்பு நிறுவனங்கள் கவலை படப்போவதில்லை. ஆதலால் நமது ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு நாம் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here