நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை – பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

0
1011

நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்துக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது வலிமை படப்பிடிப்பு பணியில் பிஸியாக உள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித் வீட்டில் இன்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின், பிஆர்ஓவான சுரேஷ் சந்திராவும் அவரது உதவியாளரும் தங்களின் வீட்டில் 3 அடி நீள மலைப்பாம்பு ஒன்றை வளர்ப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. மேலும் அந்த மலைப்பாம்புக்கு நாள் ஒன்றுக்கு 4 எலிகளை உணவாக கொடுப்பதாகவும் செய்தி வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சுரேஷ் சந்திரா வீட்டிற்கு சோதனை நடத்த சென்றனர். ஆனால் அவர் பனையூர் வீட்டிற்கு சென்றதால் அஜித்தின் பழைய வீடான சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இதுதொடர்பாக பேசிய வனத்துறை அதிகாரிகள், இந்த சம்பவத்தில் அஜித்துக்கு எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர். அவரது பிஆர்ஒ சுரேஷ் சந்திரா மற்றும் அவரது உதவியாளர் மலைப்பாம்பு வளர்த்தது உறுதியானால் அவர்கள் மீது வனவிலங்கு தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.நடிகர் அஜித் வீட்டில் முதல் முறையாக இப்படி ஒரு சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுரேஷ் சந்திரா பல நடிகர்களுக்கும் பிஆர்ஓவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here