நீங்கள் செய்யும் ஒரு Share இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற உதவும்..

0
1938

2 வயது குழந்தையின் இதய ஆபரேசன் செலவுக்காக எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/savevignesh என்ற இணையதளம் மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ்- டில்லி ராணி தம்பதியரின் ஆண் குழந்தை விக்னேஷ் (வயது 2). குறை பிரசவத்தில் பிறந்த விக்னேஷை, இன்குபேட்டரில் வைத்து தீவிர மருத்துவ கவனிப்பால் காப்பாற்றியிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், பிறக்கும்போதே அவனுக்கு இதய நோய் இருந்ததால், பெற்றோரை வேதனையில் ஆழ்த்தியது.

செகந்திராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதன்பின்னர் சென்னை மியாட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தைக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை (பிவென்ட்ரிகுலர் ஆபரேசன்) செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் இந்த ஆபரேசனுக்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் என்றும் கூறி, பணத்துக்கு ஏற்பாடு செய்யும்படி அறிவுறுத்தி உள்ளனர். குழந்தையின் உடல்நிலை விரைவில் சீரடையும் என்று டாக்டர்கள் சொன்னது பெற்றோருக்கு ஆறுதல் அளித்தபோதிலும், சிகிச்சைக்கான செலவை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.

நெசவுத் தொழில் மூலம் குறைந்த அளவே சம்பளம் வாங்கும் வெங்கடேஷ், இவ்வளவு பெரிய தொகையை திரட்டுவது என்பது முடியாத காரியம். இதனால், குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நன்கொடையாளர்களின் உதவியை நாடியிருக்கிறார்.

குழந்தை விக்னேசுடன் பெற்றோர் வெங்கடேஷ்-டில்லி ராணி

‘நாங்கள் ஏழைகள். ஆனால் எங்கள் குழந்தை எங்களுடன் இருக்கும்போது நாங்கள் பணக்காரர்களாக உணர்கிறோம். எங்களுக்கு இயன்ற உதவியை செய்யுங்கள்’ என வெங்கடேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். குழந்தை விக்னேஷின் உயிரைக் காப்பாற்றுவதற்காக எதுதர்மா அறக்கட்டளை மூலம் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நீங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாய் நிதியும், குழந்தையின் மறுவாழ்வுக்கு உதவியாக இருக்கும். குழந்தையின் இதய ஆபரேசனுக்காக ஆன்லைன் மூலம் நன்கொடை வழங்க விரும்புவோர், எதுதர்மா அறக்கட்டளையின் https://www.edudharma.com/fundraiser/savevignesh என்ற இணையதளம் மூலமாக நிதி வழங்கலாம்.

இந்த குழந்தைக்கு உதவ இந்த லின்கை கிளிக் செய்யவும்.https://www.edudharma.com/fundraiser/savevignesh

மேலும் தொடர்புக்கு:-

எதுதர்மா (அறக்கட்டளை பதிவு எண்) 12 A: 1419(32)80-91 மற்றும் 80- G-1419(32)/CIT-1/CBE/08-09

எதுதர்மா,
ரத்னம் டெக்சோன்,
பொள்ளாச்சி மெயின் ரோடு,
ஈச்சனாரி,
கோயம்பத்தூர்,
தமிழ்நாடு- 641021
+919600111639
+919087766633.

உதவுவோம் உயிர்காப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here