திருமணமான முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன்! பின்னர் செய்த திடுக்கிடும் செயல்: தம்பதியின் புகைப்படம்

0
325

தமிழகத்தில் முதலிரவில் புதுமணப்பெண்ணை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இளம்பெண்ணிற்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது.

இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிவாசன் அவரது மனைவி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருமணமான முதல் நாளிலே மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் கிராமமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

மனைவியை கொன்றுவிட்டு தப்பி ஓடி தலைமறைவான நிலையில் காட்டூர் பொலிசார் நீதிவாசனை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த தோப்பு ஒன்றில் தனியாக இருந்த வேப்ப மரத்தில் தூக்கிட்டு நீதி வாசன் தற்கொலை செய்து கொண்டது பொலிசாருக்கு தெரியவந்தது.

அங்கு விரைந்து சென்ற பொலிசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here