உண்மையிலேயே அஜித் எப்படிபட்டவர் தெரியுமா ? காதல் மன்னன் ஹீரோயின் மானு!

0
180

1998 இல் வெளியான ரொமான்டிக் படமே காதல் மன்னன். 22 வருடம் கழித்து இன்று டிவியில் பார்த்தால்கூட படம் அதிக அளவு இளமை துள்ளலுடன் தான் இருக்கும். சரண் இயக்கத்தில் பரத்வாஜ் இசையில், விவேக் மற்றும் எம் எஸ் வி நடிப்பில் அஜித்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படம். இப்படத்தில் ஹீரோயின் திலோத்தமா வேடத்தில் நடித்தவர் மானு.

மானு சமீபத்தில் பிரபல இணையத்தின் யூ ட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்லிய சில விஷயங்கள் பின்வருமாறு.

‘எனக்கு ஒரு அருமையான அனுபவம் காதல் மன்னன். என் முதல் படமே பெரிய தயாரிப்பு நிறுவனம், பிரசித்தி பெற்ற இயக்குனர் மற்றும் அசத்தலான நடிகர் அஜித். படம் வெளியாகி 22 வருடங்களுக்குப் பிறகு இன்றும் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணம் அந்த டீமின் உழைப்பு தான்.

அஜித் திறமை வாய்ந்த நடிகர். மிகவும் சிம்பிளான மனிதர். ரெக்கார்டிங் சமயங்களில் நான் அவரின் பெற்றோருடன் பழகினேன். முதல்படம் என்பதன் காரணத்தால் என்னை ஷூட்டிங் ஸ்பாட்டில் சங்கடம் நேராமல் நல்லபடியாக பார்த்துக் கொண்டார்.

அவரின் நடிப்பு, அழகிய தோற்றம் என்பதனைத் தவிர்த்து; அவர் ஒரு சிறந்த மனிதர் மற்றும் பலருக்கு உதவும் நல்ல பண்பு கொண்டவர், மாய சக்தி உடையவர்.

அதனால்தான் அனைவருக்கும் அவரை பிடிக்கும்.’ என காதல் மன்னன் படம், தல அஜித் பற்றியும் சொல்லியுள்ளார் திலோத்தமா என்கிற மானு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here