Author Archives: admin

வீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

பல குடும்பங்கள்ல பார்த்திருப்போம் நல்ல கடவுள் பக்தியுடன் கோயில் குளம் என்று சென்று வந்துகொண்டிருந்தாலும் அவர்கள் வீட்டில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பிரச்சனையுடன் இருப்பார்கள். கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்க்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான். குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வதன் மூலம் இந்த எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு ...

Read More »

வீட்டில் செல்வம் அதிகரிக்கச் செய்யும் 8 எளிய பரிகாரங்கள்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களை நிர்ணயிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட பணத்தை சேர்க்கும் வழியை தேடியே ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் நகர்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அருளும் லட்சுமி கட்டாச்சத்தை பெற பெரும் யாகங்களோ, பரிகாரங்களோ தேவையில்லை, நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் சொர்ண ஆபர்ஷண பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். ஒவ்வொரு வெள்ளியிலும் அருகிலிருக்கும் லட்சுமிதேவி ...

Read More »

கருவறைக்கு பின்புறம் ஈசனின் ஜடாமுடி பரந்து விரிந்திருக்கும் அதிசய கோயில்

கோயிலுக்கு செல்லும் அனைவரும் தவறாது கோயில் சன்னதியை வளம் வருவது முக்கியமான அம்சமாகும். ஆனால் தமிழகத்தில் ஒரு சிவன் கோயிலில் மட்டும் சன்னதியை சுற்றிவர தடை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. திருவையாறில் உள்ள ஐயாறப்பன் கோயிலில் தான் பக்தர்கள் சன்னதியை சுற்றிவர தடை உள்ளது. ஏன் இந்த தடை? மேலும் அந்த கோயிலில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். திருக்கைலாய மலை சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திருக்கைலாயத்திற்கு சென்று வழிபடுவது எல்லோராலும் இயலாத காரியமாகும், அப்படிப்பட்டவர்கள் இந்த தளத்திற்கு ...

Read More »

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியுமா?

வரலாற்று காலம் முதல் இன்றுவரை மனித இனம் படும் துயரத்தில் பெருந்துயரம் கடன் பிரச்சனை தான். கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று இராணவனின் துயரத்தை கடன் பட்டவர்களின் துயரத்தோடு ஒப்பிட்டு கம்பராமாயணத்தில் சொல்லியிருப்பார் கம்பர். இப்படிப்பட்ட கடன் சுமையிலிருந்து நம்மை காப்பாற்றும் சக்தி நமது குலதெய்வத்திற்கு இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்விலும் குலதெய்வத்தின் துணையிருந்தால் எப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்தும் மீண்டு வரலாம். குல தெய்வத்தில் அருள் இருந்தால் நம் வாழ்வில் எல்லாவிதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒவ்வொருவரும் ...

Read More »

செல்வம் பெருக குபேரனை எப்படி வழிபடவேண்டும் என்று தெரியுமா?

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை – உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை என்று சொல்வார்கள். பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட செல்வத்தை மகாலட்சுமியின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் எளிதாக அடையலாம். குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். நாம் மேற்கொள்ளும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் குபேரனுக்கு பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அரசனை செய்துவர வேண்டும். திருமகளான லட்சுமி தேவி தான் செல்வத்திற்கு ...

Read More »

உங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா? இந்த கோயிலுக்கு செல்லுங்கள்!

நம் ஒவ்வொருவரின் ஆசையும் நாம் தற்போது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ நலத்துடனும் வாழ வேண்டும் என்பதே. உங்கள் வாழ்வில் நீங்கள் பிறந்தது முதல் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறீர்களா? வாழ்வில் தடைகள் நீங்கி உங்கள் தலையெழுத்து செழிப்பாக மாறவேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டியது உங்கள் தலையெழுத்தை எழுதிய பிரம்மனின் கோயிலுக்கு தான். பிரம்ம தேவரின் கோயிலுக்கு சென்று உங்களின் இந்த நிலை மாறவேண்டும் என்று மனமுருக வேண்டினால் அவர் உங்கள் தலைஎழுத்தை மாற்றி எழுதுவார் என்று உறுதியாக பக்தர்களால் ...

Read More »

விநாயகரின் வெட்டப்பட்ட மனிதத் தலை இருக்கும் குகை இதுதானா?

விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று பொருள், கணபதி என்றால் கணங்களின் அதிபதி என்று பொருள். முழுமுதற்கடவுளாக அனைவராலும் போற்றப்படும் விநாயகருக்கு யானையின் தலை எப்படி வந்தது என்பதை பெரும்பாலான அனைவரும் அறிந்திருப்போம். சிவபெருமானால் வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள். உத்தரகண்டில் உள்ள புவனேஷ்வரில் உள்ளது பாட்டல் புவனேஸ்வர் எனும் குகை. இந்த குகைக்குள் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 160 மீட்டர் நீளமும் 90 அடி ஆழமும் ...

Read More »

கோயிலுக்கு செல்லும்போது நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள்.

* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது * வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது * சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது * பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது * கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது * கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது * கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது * நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது * தரிசனம் ...

Read More »

டச்சுப் படையினரை அலறவிட்ட திருச்செந்தூர் முருகன் : 350 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மம்!

முருகன் வழிபாடு தமிழர்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். தமிழர்கள் முருகனை தமிழ் கடவுள் என்று அழைத்து மகிழ்கின்றனர். முருகன் அல்லது கந்தர், குமரன் என்று பல்வேறு பெயர்களுடன் உலகமுழுவதும் தமிழர்கள் வாழும் இடமெங்கும் முருகனுக்கு கொயிலேழுப்பி தங்களது முருக பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் கடவுளான முருகனுக்கு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருப்பினும் அதில் அறுபடை வீடுகள் மிக முக்கியமானதாகும். இந்த அறுபடை வீடுகளில் ஒரு கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சிலையை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் ...

Read More »

அசைவம் சாப்பிட்ட பின் கோயிலுக்கு ஏன் போகக்கூடாது என்று தெரியுமா?

கோயிலுக்கு செல்லும்போது அசைவம் சாப்பிட்டுவிட்டு போகக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அவர்கள் கூறும்போது அதை மறுத்து தர்க்கம் செய்யும் பலரை பார்த்திருப்போம். அசைவம் சாப்பிட்டுவிட்டு ஏன் கோயிலுக்கு போகக்கூடாது என்பதை அறிவியல்பூர்வமாக பார்போம் வாருங்கள்… நாம் உண்ணும் உணவு நம் உடலில் பல மாற்றங்களை உண்டாக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். உதாரணமாக பொங்கல் சாப்பிட்டால் மந்தமாகவும், காரம் அதிகம் சாப்பிட்டால் கோவம் அதிகம் வருவதையும் நாம் கண்கூடாக காணலாம். பொதுவாக அசைவ உணவு நம் உடலால் ஜீரணமாக 12 மணி நேரத்திற்கு மேல் ...

Read More »