Author Archives: admin

வீட்டில் செல்வசெழிப்பை அதிகரிக்க உதவும் சித்தர் மந்திரம்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களின் நலன்களுக்காக தங்களை வருத்தி அரும்பாடுபட்டு பல அற்புத கலைகளை உருவாக்கியவர்கள் சித்தர்கள். விஞ்ஞான அறிவியலாளர்களால் இன்றளவும் கண்டறிய முடியாத பல அற்புதங்களை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து உலகிற்கு வெளிப்படுத்திய மேன்மையாளர்கள் அவர்கள். தங்களின் உடல்களை பூமியன் பல்வேறு இடங்களில் ஜீவ சமாதியாக்கி தங்களின் சூட்சும சக்திகளை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உலகிற்கு நன்மை செய்பவர்கள். தங்களை முழுமையாக நம்புபவர்களை ஒருபோதும் கைவிடாதவர்கள். அப்படிப்பட்ட சித்தர்களின் மந்திரத்தை நாம் ஜபித்து வந்தால் அவர்களின் அருளை பெற்று நம் வாழ்வில் ...

Read More »

உங்களிடம் பணம் அதிகரிக்க சில ஆன்மிக வழிகள்!

சிலர் எவ்வளவு உழைத்தாலும் அவர்களிடம் பணம் சேர்வதே கிடையாது, நாம் நேர்மையாக கடினமாக தானே உழைக்கிறோம் ஆனால் ஏன் நம்மிடம் பணம் சேர்வதே இல்லை என்ற கேள்வி பலர் மனதில் எப்பொழுதும் இருக்கும். அவர்கள் பின் கூறிய வழிகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உங்கள் வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டு பணப்புழக்கம் அதிகரிப்பதை கண்கூடாக காணலாம். எப்பொழுதும் யாரிடமும் பணம் கொடுக்கும் போது இடது கையால் கொடுக்கக் கூடாது, எப்பொழுதும் வலது கையையே உபயோகப்படுத்த வேண்டும். எப்பொழுதும் உங்கள் மணி பர்ஸ்சையோ, கல்லா பெட்டியையோ, பணப் ...

Read More »

பல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் என்று தெரியுமா?

நம் இந்திய புராணத்தில் விலங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஊர்வன வகைகளில் ஒன்றான பல்லியின் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதில் அந்த பல்லி எழுப்பும் சப்தம் மற்றும் அது நம்மீது விழுந்தால் ஏற்படும் பலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நம் பண்டைய புராணத்தில் இதற்கெனவே ஒரு படிப்பு உள்ளது என்பது தெரியுமா? அது தான் பல்லி சாஸ்திரம். இந்த பல்லி சாஸ்திரத்தில், பல்லி கத்துவது, பல்லி நம் உடலில் விழுந்தால் என்ன பலன் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் பார்க்கப் போவது ...

Read More »

இந்த விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகுவது உறுதி

இயற்கையிலேயே வெள்ளெருக்கு செடி தெய்வீக சக்திகள் கொண்ட செடியாக ஆன்மிக ரீதியில் கருதப்படுகிறது. விநாயகருக்கு விருப்பமான மலராக வெள்ளெருக்கு பூ சூட்டி வழிபடப்படுகிறது. எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் கூட மழையில்லாமல் இரவில் பெய்யும் பனியை கொண்டே வளரும் தன்மை கொண்டதாகும். எருக்கஞ்செடி வகையில் வெள்ளெருக்குக்கு ஆன்மிக ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் பல்வேறு சக்திகள் இருப்பதாக கருதப்படுகிறது. வெள்ளெருக்கு நாரை கொண்டு திரிக்கப்படும் திரியில் தீபமேற்றினால் வீட்டிலிருக்கும் ...

Read More »

நினைத்த வரம் கிடைக்க உதவும் காளி மந்திரம்

காளி என்று சொன்னாலே உக்கிரமான தெய்வம் என்று எல்லோரும் வீட்டில் வழிபட தயக்கம் காட்டுகின்றனர். காளியின் படத்தை வீட்டில் வைக்க கூட பயந்து தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் கலிங்கத்து பரணியிலும், புறப்பொருள் வெண்பாமாலை என்ற இலக்கண நூலிலும் காளி வழிபாட்டின் சிறப்புகள் குறித்தும், காளியை வழிபடுவதால் வாழ்கையில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் நிறைந்துள்ளன. காளிக்கு கொற்றவை, துர்கை, சாமுண்டி என்று பல பெயர்கள் உள்ளன. வீட்டில் உக்கிரமான வடிவிலிருக்கும் காளியின் படத்தை தான் வைத்து வணங்கக்கூடாதே தவித்து சாந்தமான வடிவிலிருக்கும் காளியின் படத்தை ...

Read More »

திருப்பதி கோயிலில் இருக்கும் பலகோடி மதிப்பிலான இரகசியமான தங்க கிணறு பற்றி தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் என்று சொன்னாலே பல்வேறு அற்புதங்களும் ஆச்சர்யங்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஏழுமலையானின் அற்புதங்களை எத்தனை முறை படித்தாலும், எத்தனை முறை பேசினாலும் நமக்கு அலுப்பதே இல்லை. திருப்பதியில் இன்றுவரை வெளியுலகிற்கு தெரியாத பல மர்மங்கள் நிலவி வருகிறது அந்த வரிசையில் திருப்பதி கோயில் இருக்கும் திருமலையில் இரண்டு தங்க கிணறுகள் இருக்கும் ரகசியம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாருங்கள். திருமலையில் இருக்கும் ஏழுமலையானின் கோயிலின் உள்ளே உள்ள விமான பிரகாரத்தில் தங்க கிணறு ...

Read More »

ஆஞ்சநேயர் இமய மலையில் இன்னும் உயிருடன் இருக்கிறார்? ஆச்சர்யமான தகவல்கள்!

இன்னமும் ஹனுமான் உயிருடன் உள்ளாரா? பூவுலகில் ஆஞ்சநேயர் வாழ்கிறாரா என்பதை அறிய ஸ்ரீராமரை வழிபடும் அனைத்து பக்தர்களும் விருப்பப்படுவார்கள். ஹனுமான் என்பவர் பலம், தைரியம், சக்தி, வலிமை, ஆற்றல் திறன், ஞானம், பக்தி, பணிதல் மற்றும் சேவையின் சின்னம் என்பதால் தான் நாம் அனைவரும் ஆஞ்சநேயரை வழிபடுகிறோம். சொல்லப்போனால், வீரத்தின் உருவமே ஹனுமான் தான். சரி, ஆஞ்சநேயர் இன்னமும் உயிருடன் உள்ளாரா?இந்த கேள்வி பலரின் மனதில் உள்ளது. சாகா வரத்தை பெற்றுள்ளதால், ஆஞ்சநேயர் உயிருடன் தான் இருப்பார் என சமயத்திரு நூல்கள் நிச்சயமாக கூறுகின்றன. ...

Read More »

கடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்!

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவர்களின் நெஞ்சம் படும் துயரத்தை கம்பர் கம்ப ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன் தொல்லை ஏற்பட்டுவிட்டால் மனிதனின் மனம் நிம்மதி குறைந்து அல்லலுற நேரிடுகிறது. கடன்தொல்லையில் இருந்து விடுபட சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்மர் ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் போதும் எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடையலாம். இந்த ஐந்து கோயில்களும் அமைய முக்கிய காரணம் ...

Read More »

தானாய் தோன்றிய சுயம்பு லிங்கம் – குகை முழுதும் நிலவும் மர்மங்கள்!

இந்தியாவின் பல கோயில்களில் சுயம்புவாக தோன்றிய லிங்க வடிவங்களை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவம் தோன்றி பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது இந்த அதிசய குகையை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள ரியாசி மாவட்டத்தில் பெளனி என்ற கிராமத்தில் உள்ளது சிவ் கோரி என்ற குகை. இந்த குகையில் சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கத்தின் மேல் எப்பொழுதும் நீர் சொட்டியபடியே உள்ள அதிசயம் நிகழ்கிறது. இந்த நீர் ...

Read More »

மார்பளவு தண்ணீரில் 1000 அடி குகையில் உள்ள அதிசய நரசிம்மர் கோயில்

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள். கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது ...

Read More »