Author Archives: admin

கிருஷ்ணர் தினமும் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அமானுஷ்யங்களும் ஆச்சர்யங்களும் நிறைந்த பல்வேறு கோயில்கள் இந்தியாவெங்கும் நிறைந்திருக்கிறது. அந்த வரிசையில் கிருஷ்ணரும் ராதையும் தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோயிலை பற்றி பார்க்கலாம் வாருங்கள். உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் உள்ளது பிருந்தாவனம் எனும் ஊர். இதை ஹிந்திரில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர். மகாபாரத இதிகாசத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படும் இந்த இடத்தில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோயில்கள் நிறைந்துள்ளன. இதில் மிக முக்கியமாக இங்குள்ள நிதிவனம் ...

Read More »

7000 ஆண்டுகளாக நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் – அறிவியலால் விளங்க முடியாத அதிசயம்!

பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும் தன்னுள் பல்வேறு அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அவ்வகையில் கர்நாடக மாநிலத்திலிருக்கும் ஒரு கோயிலில் இருக்கும் நந்தி சிலை இந்த நாவீன யுக காலத்திலும் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு அமானுஷ்யமாக விளங்கிவருகிறது. கர்நாடக மாநிலத்திலுள்ள, மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்”. இந்த கோயில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் வெளிவந்தபடியே இருப்பது ...

Read More »

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவன் கோயில் – நீர்விலகி வழிவிடும் அதிசயம்!

குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக… இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.இந்த ஆலயத்தின் கல் கொடிமரம் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை ...

Read More »

இந்த இடத்தில உப்பு வைத்தால் வீட்டில் செல்வம் குறையவே குறையாதாம்!!

யாருமே தங்களை சுற்றியும், தாம் வசிக்கும் இடத்திலும் கெட்ட / எதிர்மறை சக்தி இருக்க விரும்ப மாட்டார்கள். இது தேவையில்லாத மன அழுத்தம், பதட்டம் அதிகரிக்க செய்யும். மேலும், இதனால் வீட்டில் ஏழ்மை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உப்பை பயன்படுத்தி இந்த நிலையை மாற்ற சில வழிகள் இருக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் ஏழ்மை விலக, கெட்ட சக்திகள் நீக்க முடியும் என கூறப்படுகிறது. #1 இந்த ட்ரிக்கை ஞாயிறுகளில் மட்டும் முயற்சி செய்ய வேண்டாம். இந்த ட்ரிக்கை செய்ய நீங்கள் கடல் ...

Read More »

கோடீஸ்வர யோகம் யாருக்கு? உங்க கைரேகையில் இருக்கானு பாருங்க ?

‘குரு பார்க்க கோடி நன்மை’ என்ற பழமொழி ஜோதிடத்தில் அதிகம் உபயோகிக்கப்படும் வாக்கு. எந்தக் கிரகம் கெட்ட இடத்தில் இருந்தாலும், அந்த இடத்தை குரு பார்க்க நேரிட்டால், அந்த கெட்ட தோஷம் அடியோடு விலகிவிடும். நவக்கிரகங்களில் மேலான வலு பெற்று விளங்குபவர் குரு பகவான். அரசன் என்றும், ஆசான் என்றும் வர்ணிக்கப்படும் குரு பகவான், பிரம்மாவின் பேரன் என்று புராணம் கூறுகிறது. குரு பலம் தான் திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களுக்கு அடிப்படை. இந்த குருவும், கேதுவும் இணைந்து ஒருவர் ஜாதகத்தில் அமைந்திருந்தால், அந்த ...

Read More »

அந்தரத்தில் தொங்கும் ஒற்றை தூண் – விடையின்றி நீளும் மர்ம கோயில்!

பெங்களூரிலிருந்து 125 கிமீ தொலைவில் தெற்கு ஆந்திராவில் இருக்கும் ஆனந்தபுரா எனும் பகுதியில் உள்ள லேபக்ஷி கிராமத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கும் லே பக்ஷி வீர பத்ர கோயில் இன்றும் நமது முன்னோர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது. இராமாயண காலத்தில் ஜடாயு ராவணனால் தாக்கப்பட்டு கிடந்த போது, ராமன், அதை குணமாக்கி, எந்திரி பட்சி(லே பக்ஷி) என்று சொன்னார். ஜடாயு விழுந்து கிடந்த இடத்தில் விரன்னா, விருப்பன்னா என்ற இரண்டு சகோதரர்களால் 16 ம் நூற்றாண்டில் ...

Read More »

இந்த தூண் இடிந்து விழுந்துவிட்டால் உலகம் அழிந்துவிடுமாம்!

இந்தியாவில் சில மர்மங்களும், அமானுஷ்யங்களும் இன்று வரை அறிவியலால் கூட பதில் சொல்லமுடியாத புதிராக நிலவி வருகிறது. இந்த வரிசையில் பல யுகங்களை கடந்தும் இடியாமல் நிற்கும் ஒரு தூண் குறித்தும், இந்த தூணிற்கு பின்னால் ஒளிந்துள்ள மக்களின் நம்பிக்கை குறித்தும், இன்று உலகத்தால் மிக ஆச்சர்யத்துடன் பார்க்கப்படும் கோயில் தான் ஹரிஷ்சந்திரகட். மகாராஷ்டிர மாநிலத்தில் அஹமத் நகரில் கலாசூரி பேரரசால் 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு அருகில் கேதாரேஷ்வர் என்ற ஆச்சரிய குகையினை காணலாம். குகைக்கு உள்ளே சென்றால் நீரினால் சூழப்பட்ட ...

Read More »

சனிபகவானின் அருளை பெற்று துன்பங்களிலிருந்து விடுபட எளிய ரகசியம்

நவகிரகங்களில் சனிபகவான் முக்கியமானவர், சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை என்று சொல்வார்கள், நவகிரகங்களில் சனிபகவான் மட்டுமே ஈஸ்வர பட்டத்தை அடைந்தவராவார். மற்ற கிரகங்களின் பெயர்ச்சியை பெரிதாக அலட்டிக்கொள்ளாதவர்கள் கூட சனிப்பெயர்ச்சி என்றால் இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்குமோ என்று அச்சப்பட தொடங்கிவிடுகின்றனர். ஆனால் சனிபகவானை குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை என்பதே உண்மை. நீங்கள் கஷ்டத்தின் மேல் கஷ்டங்களை அனுபவிக்கிறீர்களா பின்வரும் வழியை பின்பற்றி வாருங்கள் உங்களின் அத்தனை துன்பங்களும் உங்களை விட்டு அகலும் . தினமும் காலை ...

Read More »

ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம் தங்க நிறமாக மாறும் அதிசய நந்தி!

தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களில் பொதுவாகவே நமக்கு தெரியாத பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அப்படியான அதிசயங்களை அறியும்போது எப்படி இது போன்ற அதிசயங்கள் நிகழ்கின்றது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். வருடத்திற்கு ஒருமுறை தங்க நிறத்திற்கு மாறும் அதிசய நந்தி சிலையை பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? வாருங்கள் இந்த அதிசய நந்திபகவானை பற்றிய அறிய தகவல்களை தெரிந்துகொள்வோம் . தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலவருடன், தட்சணாமூர்த்தி, ...

Read More »

தலைகீழாக நிழல்விழும் ஈசனின் கோவில் கோபுரம் – விழிபிதுங்கும் விஞ்ஞானிகள்!

இந்தியாவில் பல்வேறு அதிசயம் மிகுந்த பல கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயில்களின் வரிசையில் மிக முக்கியமானது கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம் நடந்துவருகிறது . தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது. ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது. பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ...

Read More »